Advertisement

ஆபரண தங்கத்தின் விலையில், தொடர்ந்து 4-வது நாளாக சரிவு

By: vaithegi Wed, 23 Nov 2022 12:21:32 PM

ஆபரண தங்கத்தின் விலையில், தொடர்ந்து 4-வது நாளாக சரிவு

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில், தொடர்ந்து 4-வது நாளாக சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 4 நாட்களில் மற்றும் சவரனுக்கு ரூ.528 குறைந்துள்ளது. செவ்வாய்கிழமையான நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.39,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4905-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

gold,silver ,தங்கம் ,வெள்ளி

இதையடுத்து இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

மேலும் ஒரு கிராம் வெள்ளி 67 ரூபாயாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவாதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags :
|