Advertisement

ஆபரண தங்கம் விலை சரிந்தது

By: vaithegi Fri, 07 Apr 2023 1:54:51 PM

ஆபரண தங்கம் விலை சரிந்தது

சென்னை: இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு ... எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.

இதனை அடுத்து தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

gold price,silver , தங்கம் விலை,வெள்ளி

எனவே அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,120-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.5,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போன்று, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :