Advertisement

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

By: vaithegi Fri, 12 May 2023 11:35:49 AM

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று அனைவரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிவைக் கண்டு உள்ளது.

gold price,by days,jewelery gold , தங்கத்தின் விலை,நாட்களாகவே  ,ஆபரணத் தங்கம்

இதையடுத்து அதன்படி, நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளியின் விலை 3 ரூபாய் 3 காசுகள் எனக் குறைந்து, 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.78.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.3,300 குறைந்து ரூ.78,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :