Advertisement

ஆபரண தங்கம் விலை இன்று குறைந்துள்ளது

By: vaithegi Mon, 12 June 2023 1:45:13 PM

ஆபரண தங்கம் விலை இன்று குறைந்துள்ளது

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே உச்சத்தை தொட்டது. இதன் பின்னர் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி கொண்டு வருகிறது. மே மாத தொடக்கத்தில் 46 ஆயிரம் ரூபாயாக அதிகரித்த தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் சற்று குறைய தொடங்கியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்தது.இதையடுத்து நேற்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,600 ஆகவும், 1 சவரன் ரூ.44,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

jewelery gold price,chennai ,ஆபரண தங்கம் விலை,சென்னை

இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து உள்ளது. எனவே இதன் மூலம் 1 கிராம் தங்கம் ரூ.5580 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அத்துடன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,640 -க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,392க்கு விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.79.30-க்கும் , 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.79,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :