Advertisement

ரூ.42,000ஐ நெருங்கும் ஆபரண தங்கம்

By: vaithegi Thu, 05 Jan 2023 12:16:46 PM

ரூ.42,000ஐ நெருங்கும் ஆபரண தங்கம்

சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே இருக்கிறது. மேலும் தற்போது பணவீக்கம், பொருளாதார மந்த நிலை போன்றவற்றை தொடர்ந்து, தங்கம் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வகையில் தான் உள்ளது. அந்த வகையில், கடந்த 3ம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.228 அதிகரித்து ரூ.41,528க்கும் விற்பனையானது.இதே போன்று நேற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.136க்கு உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை செய்யப்பட்டது.

ornamental gold,inflation ,ஆபரண தங்கம்,பணவீக்கம்

இதையடுத்து இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடி உயர்வை கண்டுள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகைப்பிரியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,228க்கு விற்பனையாகிறது.

இதே போன்று ஒரு சவரம் ரூ.160 என அதிரடியாக உயர்ந்து, ரூ.41,824க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு 100 காசுகள் (ரூ.1) குறைந்துள்ளது. எனவே அதன்படி இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :