Advertisement

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவு விற்பனையாகி பார்லே-ஜி பிஸ்கெட் சாதனை

By: Monisha Thu, 11 June 2020 4:12:38 PM

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவு விற்பனையாகி பார்லே-ஜி பிஸ்கெட் சாதனை

கொரோனா ஊரடங்கு காலத்தில் பார்லே-ஜி பிஸ்கெட் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது என பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராண்டட் பிஸ்கெட் சந்தையில் பார்லே-ஜி பிராண்டின் சந்தைமதிப்பு 5 சதவீதம். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பிஸ்கெட் விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பார்லே நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

பார்லே நிறுவனத்தின் குறைந்த விலை பிஸ்கெட் பாக்கெட் ரூ.2 ஆகும். இதில் குளுக்கோஸ் சத்து இருப்பதால் ஊரடங்கு காலத்தில் இது மிகச் சிறந்த மாற்று உணவாக பலருக்கும் பயன்பட்டுள்ளது.

parle-g biscuits,curfew,maximum sales,record,market value ,பார்லே-ஜி பிஸ்கெட்,ஊரடங்கு,அதிகளவு விற்பனை,சாதனை,சந்தைமதிப்பு

ஊரடங்கு காலத்தில் மட்டும் பார்லே நிறுவனத்தின் விற்பனை 4.5 சதவீதம் முதல் 5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களில் சந்தை அளவு அதிகரித்துள்ளது சாதனையாகும். கடந்த காலங்களில் இதுபோன்ற வளர்ச்சியை எட்டியதில்லை என்று மயங்க் ஷா குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு பேரிடர் காலங்களில் கூட இந்த அளவுக்கு விற்பனை அதிகரித்ததில்லை. பிராண்டின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை இதற்கு சிறந்த உதாரணம். இவ்வாறு மயங்க் ஷா கூறினார்.

Tags :
|
|