Advertisement

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: Monisha Tue, 08 Sept 2020 10:04:36 AM

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யவில்லை. அதன் பின்னர் ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 85.04 ரூபாய், டீசல் லிட்டர் 78.48 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

petrol,diesel,prices,oil companies,crude oil ,பெட்ரோல்,டீசல்,விலை,எண்ணெய் நிறுவனங்கள்,கச்சா எண்ணெய்

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி 85.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 78.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Tags :
|
|
|