Advertisement

கடந்த மாதம் முதல் பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடிப்பு

By: Monisha Wed, 18 Nov 2020 09:05:56 AM

கடந்த மாதம் முதல் பெட்ரோல், டீசல் ஒரே விலையில் நீடிப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol,diesel,prices,crude oil,oil companies ,பெட்ரோல்,டீசல்,விலை,கச்சா எண்ணெய்,எண்ணெய் நிறுவனங்கள்

இந்நிலையில், பெட்ரோல், டீசல் கடந்த மாதம் முதல் ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த விலை இன்றும் மாற்றம் செய்யப்படாமல், அதே விலையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.75.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது.

Tags :
|
|
|