Advertisement

பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

By: vaithegi Sun, 27 Aug 2023 11:10:46 AM

பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

சென்னை: இந்தியாவில் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே அதன் அடிப்படையில் இன்று விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் பற்றி பதிவில் காண்போம்.

இதையடுத்து இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. கடந்த வருடத்தில் நிலவிய உக்ரைன் – ரஷ்யா போர், கொரோனா போன்றவற்றின் விளைவாக பெட்ரோல் டீசல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளது.

petrol,diesel,price ,Petrol, Diesel, Price


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது சர்வதேச அளவில் சந்தை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் அதே போல டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 463-வது நாளுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.

Tags :
|
|