Advertisement

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

By: Monisha Fri, 20 Nov 2020 08:44:42 AM

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol,diesel,prices,oil companies,crude oil ,பெட்ரோல்,டீசல்,விலை,எண்ணெய் நிறுவனங்கள்,கச்சா எண்ணெய்

இந்நிலையில், பெட்ரோல, டீசல் விலை கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு பின்பு இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இன்று பெட்ரோல் விலை 59 நாட்களுக்கு பின் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து, ரூ.84.31-க்கும், டீசல் விலை 49வது நாட்களுக்கு பின் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17 ஆகவும் விற்பனையாகிறது.

Tags :
|
|
|