Advertisement

இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது

By: vaithegi Fri, 01 Sept 2023 1:40:43 PM

இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது


சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு விலை என்பது பற்றி பார்க்கலாம். தலைநகர் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் 0.11 காசுகள் குறைந்து ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

petrol and diesel price ,பெட்ரோல், டீசல் விலை

இதனை அடுத்து அதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 1லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 0.56 காசுகள் உயர்ந்து ரூ. 103. 59க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோயம்புத்தூர், தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல்,

மேலும் புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 0.09 காசுகள் குறைந்து ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :