Advertisement

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:42:28 PM

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம்

சென்னை: இந்தியா கச்சா எண்ணெய்யை OPEC (Organization of Petroleum Exporting Countries) என்கிற அரேபிய கூட்டமைப்பிலிருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கச்சா எண்ணையின் இறக்குமதி, சரக்கு கட்டணம், உள்ளூர் வரி போன்றவற்றை பொறுத்தே பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் திடீரென கடந்த 2021 -ம் ஆண்டு விலை உயர்த்தப்பட்டது. அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

sale,petrol,diesel price ,விற்பனை , பெட்ரோல், டீசல் விலை

இதன் பின், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9 குறைந்து ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் பின்னர், கிட்டத்தட்ட 500 நாளாக உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|