Advertisement

3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

By: Monisha Tue, 09 June 2020 3:48:34 PM

3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தவுடன் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 54 பைசாவும், டீசலில் லிட்டருக்கு 58 பைசாவும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த 3 நாள் விலை உயர்வு மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 74 பைசாவும், டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 78 பைசாவம் உயர்ந்துள்ளன.

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.46 பைசாவிலிருந்து ரூ.73 ஆகவும், டீசல் லி்ட்டர் ரூ.70.59 பைசாவிலிருந்து ரூ.71.17 ஆகவும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.77.08 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.69.74 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

petrol,diesel,prices,international market,crude oil ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு, சர்வதேச சந்தை,கச்சா எண்ணெய்

கடந்த 82 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும், தொடர்ந்து 2-வது நாளாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

கடந்த மார்ச் 16-ம் தேதிதான் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|