Advertisement

10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை

By: vaithegi Sun, 02 Apr 2023 11:00:14 AM

10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை

இந்தியா: நாட்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கடந்தாண்டு ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர், 5 மாநிலங்களில் தேர்தல் போன்றவற்றின் காரணமாக பெட்ரோல் ரூ.110.85க்கும் , டீசல் ரூ.100.94க்கும் என கிடுகிடுவென உயர்ந்தது.

இதனை அடுத்து இந்த விலை உயர்வு கடந்த மே 21ம் தேதி வரை மாற்றமின்றி இருந்தது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

petrol,diesel , பெட்ரோல் ,டீசல் ,

எனவே பெட்ரோல் ரூ.8.22 குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை இந்த விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த 20220-ம் ஆண்டு மே 22-ம் தேதி முதல் இன்று வரை என மொத்தமாக 316-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :
|