Advertisement

500வது நாளாக மாற்றமில்லாமல் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல்

By: vaithegi Tue, 03 Oct 2023 09:52:07 AM

500வது நாளாக மாற்றமில்லாமல் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல்

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இதற்கு இடையே ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாகவும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இதனை அடுத்து சென்னையில் கடந்த மே 21ம் தேதி பெட்ரோல் ஒரு லிட்டர் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

petrol,diesel,sales ,பெட்ரோல் ,டீசல் ,விற்பனை


அதை தொடர்ந்து சென்னையில் மே.22ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக பெட்ரோல் டீசலை விலையில் மாற்றம் இன்றி நீடித்து வந்தது

இந்த நிலையில் சென்னையில் 500வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லை. 1.லி பெட்ரோல் 102.63க்கும்,1.லி டீசல் ரூ. 94.24க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது. 2022ம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50ம், டீசல் லிட்டருக்கு ரூ . 7ம் குறைத்தது ஒன்றிய அரசு .

Tags :
|
|