Advertisement

பெட்ரோல் டீசல் விலை 10-வது நாளாக இன்றும் உயர்வு

By: Monisha Tue, 16 June 2020 4:37:35 PM

பெட்ரோல் டீசல் விலை 10-வது நாளாக இன்றும் உயர்வு

சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 16-ம் தேதி கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

இந்நிலையில், பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது.

petrol,diesel,price hike,delhi,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு,டெல்லி,சென்னை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 47 பைசாவும், டீசல் லிட்டருக்கு 93 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லி்ட்டர் ரூ.76.26 பைசாவிலிருந்து ரூ.76.73 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லி்ட்டர் ஒன்றுக்கு ரூ.74.26 லிருந்து, ரூ.75.19 ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.41 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.73.17 ஆகவும் அதிகரி்த்துள்ளது.

கடந்த 10 நாட்களில் தொடர்ந்து விலை அதிகரிப்பால் பெட்ரோலில் லி்ட்டருக்கு ரூ.5.47 பைசாவும், டீசலில் லிட்டருக்கு ரூ.5.80 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

Tags :
|
|
|