Advertisement

பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

By: vaithegi Mon, 13 Feb 2023 6:11:41 PM

பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

சென்னை: கடந்த 267 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 268 வது நாளாகவும் உயரவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்துள்ளதால் இந்தியா உள்பட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

petrol,diesel,crude oil ,பெட்ரோல் ,டீசல்,கச்சா எண்ணெய்

அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படும் மேலும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரல் 60 டாலர் என மேற்கத்திய நாடுகள் விலை நிர்ணயம் செய்ததால் ரஷ்யா இந்த பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|