Advertisement

393-வது நாளாக பெட்ரோல் , டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை

By: vaithegi Sun, 18 June 2023 11:07:35 AM

393-வது நாளாக பெட்ரோல் , டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை

சென்னை: இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாற்றமில்லை ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பல்வேறு தரப்புகளிலிருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

petrol and diesel price , பெட்ரோல் , டீசல் விலை

இதனை அடுத்து தற்பொழுது, இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 46 அல்லது 0.79% என உயர்ந்து ரூ.5,881 ஆக உள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும் 393-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.

Tags :