Advertisement

சென்னையில் பெட்ரோல் விலை 14வது நாளாக அதிகரிப்பு

By: Monisha Sat, 20 June 2020 10:31:15 AM

சென்னையில் பெட்ரோல் விலை 14வது நாளாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. இந்நிலையில், 14வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

petrol,diesel,prices,chennai,delhi ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு,சென்னை,டெல்லி

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் 81 ரூபாய் 82 காசுகளுக்கும், டீசல் 74 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை ஆனது. இன்று, பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கடந்த 14 நாட்களில் மட்டும் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ரூ.78.78 ஆகவும், டீசல் விலை 61 காசுகள் உயர்ந்து ரூ.77.67 ஆகவும் விற்பனை ஆகிறது.

Tags :
|
|
|