Advertisement

இன்னும் ஒரு சில வாரங்களில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு

By: vaithegi Thu, 15 Dec 2022 10:04:04 AM

இன்னும் ஒரு சில வாரங்களில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு

சென்னை : பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு ... சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 207 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை நாம் பார்த்து கொண்டு வருகிறோம்

இதனை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த போதிலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

petrol,chennai ,பெட்ரோல் ,சென்னை

ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் பெட்ரோல் விலை குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது பற்றி அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த நிலையில் 208-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.

Tags :
|