Advertisement

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Wed, 09 Sept 2020 5:55:32 PM

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்!

இந்திய சந்தையில் போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :