Advertisement

போக்கோ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனை

By: Nagaraj Sat, 10 Oct 2020 3:03:34 PM

போக்கோ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனை

விரைவில் போக்கோ ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை வரும் 16-ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேஷ விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள்,லேப்டாப், ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என எல்லாவற்றிற்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

smartphone,design,13mp camera,four rear camera ,ஸ்மார்ட்போன், வடிவமைப்பு, 13எம்பி கேமரா, நான்கு ரியர் கேமரா

சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் மூலம் ரூ.10,499-விலையில் வாங்கி கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு, 13எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80என்எம் பிராசஸர் என ஏராளமான அம்சங்களை பெற்றுள்ளது.

Tags :
|