Advertisement

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் விலை உயர்வு

By: Monisha Fri, 17 July 2020 5:59:06 PM

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் விலை உயர்வு

இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் மாடல்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் இணைந்து உள்ளது.

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இதன் புதிய விலை ரூ. 9499 ஆக மாறியுள்ளது. இந்தியாவில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

moto g8 power lite,smartphone,price hike,india ,மோட்டோ ஜி8 பவர் லைட்,ஸ்மார்ட்போன்,விலை உயர்வு,இந்தியா

புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிரேடியண்ட் பிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Tags :