Advertisement

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

By: Monisha Wed, 09 Sept 2020 5:55:13 PM

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் தனது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.

புதிய விலை குறைப்பின் படி ரியல்மி 6 6ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என மாறி உள்ளது. முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 15,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

realme company,indian market,realme 6,realme 6i,smartphone ,ரியல்மி நிறுவனம்,இந்திய சந்தை,ரியல்மி 6,ரியல்மி 6ஐ,ஸ்மார்ட்போன்

இதேபோன்று 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16999 இல் இருந்து ரூ. 15999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17999 இல் இருந்து ரூ. 16999 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரியல்மி 6 அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது.

ரியல்மி 6ஐ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 6ஐ 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Tags :