Advertisement

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் விலை வெளியீடு!

By: Monisha Sat, 12 Sept 2020 6:20:40 PM

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் விலை வெளியீடு!

இந்திய சந்தையில் சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் நிறங்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் ரக நாட்ச், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வசதி வழங்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன் ரெட்மி 9, ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9 பிரைம் உள்ளிட்ட மாடல்களை தொடர்ந்து அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

indian market,xiaomi,redmi brand,redmi 9i,smartphone ,இந்திய சந்தை,சியோமி,ரெட்மி பிராண்டு,ரெட்மி 9ஐ,ஸ்மார்ட்போன்

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 7999 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

Tags :
|