Advertisement

ஆபரணத்தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Mon, 25 July 2022 1:17:43 PM

ஆபரணத்தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: நடப்பு ஆண்டு இந்தியாவில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இந்த இறக்குமதி வரி அதிகரித்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 23ம் தேதி அன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்தது. நேற்று (ஜூலை 24) விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றம் இல்லை.

gold,price ,தங்கம் ,விலை

இந்நிலையில் திங்கட் கிழமையான (ஜூலை 25) இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளது. அதனால் ஒரு சவரன் ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து ரூ.4,720-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று வெள்ளியின் விலை சவரனுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.61.10க்கு விற்பனையாகி வருகிறது. தற்போது தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Tags :
|