Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Fri, 16 Sept 2022 11:52:11 AM

ஆபரணத் தங்கத்தின் விலை  நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

gold price,chennai , தங்கம் விலை,சென்னை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் எனத் தெரிகிறது.

Tags :