Advertisement

தொடர்ந்து சரியும் காய்கறிகளின் விலை

By: vaithegi Fri, 08 Sept 2023 2:13:36 PM

தொடர்ந்து சரியும் காய்கறிகளின் விலை

சென்னை: காய்கறிகளின் விலை கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக விலை சரிந்து கொண்டு வருகிறது .. இந்தியா முழுவதும் கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் தக்காளியின் விலை ரூ.250-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் இதன் விலை கடுமையாக அதிகரித்தது.

மேலும் அது மட்டுமில்லாமல் வட மாநிலங்களில் பெய்த பருவமழை காரணத்தால் மற்ற காய்கறிகளின் விளையும் மளமளவென உயர்ந்தது.எனவே இதற்கு மத்தியில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

vegetable,chennai ,காய்கறி,சென்னை

இச்சூழலில் எப்போது விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தக்காளியின் விளைச்சல் அதிகரித்து. தற்போது தமிழகத்தில் 1 கிலோ தக்காளி விலை ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்.

இதனை அடுத்து மறுபக்கம் காய்கறிகள் நல்ல விலைக்கு போகாததால் வியாபாரிகள் வேதனை அடைந்து உள்ளனர். தக்காளியை தொடர்ந்து வெண்டைக்காய் கிலோ ரூ.20, அவரைக்காய் கிலோ ரூ.44க்கும் வாழைக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ. 25 காலிபிளவர் ரூ. 35-க்கு விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :