Advertisement

தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக விற்பனை

By: vaithegi Mon, 30 Oct 2023 1:00:09 PM

தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகளின் விலை இரட்டிப்பாக விற்பனை

சென்னை: காய்கறிகளின் விலை கடும் அதிகரிப்பு ..தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணத்தினால் போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் காய்கறிகளின் கொள்முதல் பாதியாக குறைந்து உள்ளது.

இதனால், ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விடைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது பற்றிய பட்டியலை காணலாம்.

price of vegetables,rain,sale ,காய்கறிகளின் விலை , மழை,விற்பனை

அதன்படி முதலாவதாக, அவரைக்காய் கிலோ ரூ.60க்கும், நெல்லிக்கனி ரூ. 89-க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ. 40-க்கும், பாகற்காய் ரூ.35க்கும், கத்தரிக்காய் ரூ. 30-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 15 க்கும், குடைமிளகாய் ரூ.50க்கும், கேரட் ரூ.35 க்கும், காலிபிளவர் ரூ.25க்கும், தேங்காய் ரூ. 30-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 20 க்கும், முருங்கைக்காய் ரூ.80க்கும், பூண்டு ரூ.120க்கும், இஞ்சி ரூ.10க்கும், பச்சை மிளகாய் ரூ.40 க்கும், மாங்காய் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பெரிய வெங்காயம் கிலோ ரூ.64 க்கும், வெங்காயம் ரூ.90க்கும், பீர்க்கங்காய் ரூ. 40க்கும், உருளைக்கிழங்கு ரூ. 60க்கும், முள்ளங்கி ரூ. 50க்கும், சேப்பங்கிழங்கு ரூ. 50க்கும், தக்காளி ரூ.30-க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும், பூசணிக்காய் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|