Advertisement

மீண்டும் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை

By: vaithegi Sun, 24 Sept 2023 5:56:27 PM

மீண்டும் உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை


சென்னை: ஜூலை மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வட மாநிலங்களில் பெய்து வந்த கனமழை காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு காரணமாகவும் காய்கறிகளின் விலை அதிக அளவில் உயர தொடங்கியது. அதிகபட்சமாக தக்காளியின் விலையானது கிலோ ரூபாய் 200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.

தக்காளியை போன்று அனைத்து வித காய்கறிகளின் விலையும் அதிகரித்ததால் அரசு இதற்கான தீவிர நாடிவடிக்கைகளை மேற்கொண்டு காய்கறிகளின் விலைகளை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது புரட்டாசி மாதம் துவங்கியுள்ளது.

price of vegetables,heavy rain ,காய்கறிகளின் விலை,கனமழை

இதையடுத்து புரட்டாசி மாதத்தில் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு முழுவதுமாக சைவ உணவுகளையே உண்பது வழக்கமான, இதனால் தமிழகத்தில் திடீரென்று காய்கறிகளின் விலையானது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையின் விலை நிலவரங்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 30, சின்ன வெங்காயம் ரூபாய் 70, பீட்ரூட் ரூபாய் 40, மிளகாய் ரூபாய் 40, உருளைக்கிழங்கு ரூபாய் 35, முருங்கைக்காய் 1 கிலோ 40, கத்தரிக்காய் 1 கிலோ 50, சுரைக்காய் 1 கிலோ 20, பட்டர் பீன்ஸ் 90 ரூபாய், பீன்ஸ் 1 கிலோ 60, இஞ்சி 1 கிலோ 250 என்று விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :