Advertisement

இந்தியாவில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகள் துவங்கியது!

By: Monisha Tue, 25 Aug 2020 6:00:22 PM

இந்தியாவில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகள் துவங்கியது!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடல் உற்பத்தி பணிகளை இந்தியாவில் துவங்கி உள்ளது. இதன் உற்பத்தி பணிகள் பெங்களூருவில் அமைந்துள்ள விஸ்ட்ரன் ஆலையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்இ2020 மாடலை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்னதாக சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் 11 மாடலுக்கான உற்பத்தி பணிகளை துவங்கியது. தற்சமயம் இந்தியாவில் உற்பத்தியாகும் ஐபோன் எஸ்இ2020 மாடல் ஒரு மாத காலத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

apple,iphone 11,manufacturing,import,foxconn ,ஆப்பிள் நிறுவனம்,ஐபோன் 11,உற்பத்தி,இறக்குமதி,ஃபாக்ஸ்கான்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 11 விலை குறைக்கப்படாததால், இங்கு உற்பத்தி செய்யப்பட இருக்கும் ஐபோன் எஸ்இ மாடலின் விலை உடனடியாக குறைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பட்சத்தில் ஐபோன்களுக்கான இறக்குமதி வரியை ஆப்பிள் சேமிக்க முடியும்.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எஸ்இ (2016) மற்றும் ஐபோன் 7 போன்ற மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்து இருக்கிறது. முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 ப்ரோ மாடல்களை சென்னை அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படு இருந்தது.

Tags :
|
|