Advertisement

இந்தியாவில் நாளை ரியல் மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்

By: Nagaraj Tue, 06 Oct 2020 08:48:15 AM

இந்தியாவில் நாளை ரியல் மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்

நாளை இந்தியாவில் அறிமுகம்... ரியல்மி நிறுவனம் தற்போது Realme 7i என்ற ஸ்மார்ட்போனை வரும் 7ம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த ரியல்மி 7i ஸ்மார்ட்போனின் விலை குறித்த சில விவரங்கள் வெளியாகி உள்ளது.

நாளை 7 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக ரியல்மி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டீசரை ரியல்மியின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் வெளியிட்டுள்ளார்.

ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720p ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

fingerprint,sensor,64mp primary lens,8mp ultra wide ,
கைரேகை, சென்சார், 64எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைடு

இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் கொண்டதாகவும், மெமரி நீட்டிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் Android 10 அடிப்படையிலான Realmy UI இல் இயங்கும் தன்மை கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் கைரேகை சென்சார், 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி சென்சார் போன்றவற்றையும் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன், 5000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உ ள்ளது. இந்த சாதனம் இந்தோனேசியாவில் அரோரா கிரீன் மற்றும் போலார் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

Tags :
|