Advertisement

ரியல்மி 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம்!

By: Monisha Tue, 14 July 2020 6:03:26 PM

ரியல்மி 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் இந்திய சந்தையில் அறிமுகம்!

இந்திய சந்தையில் ரியல்மி நிறுவனம் 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க்-கை அறிமுகம் செய்தது. இந்த பவர் பேங்க் 18 வாட் சார்ஜர்களை விட 53 சதவீதம் அதிவேக சார்ஜிங் வழங்குகிறது. மேலும் இந்த பவர் பேங்க் கொண்டு 30 வாட் வூக், / டார்ட் சார்ஜ் வசதி கொண்ட சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். இது 20 வாட், 18 வாட், 15 வாட் மற்றும் 10 வாட் சாதனங்களையும் சார்ஜ் செய்யும்.

இத்துடன் பவர் பேங்க் ஒரே சமயத்தில் டைப் சி மற்றும் டைப் ஏ போர்ட்களில் சார்ஜ் செய்யும். பவர் பேங்க் கொண்டு யுஎஸ்பி டைப் சி 30 வாட் சார்ஜிங் மூலம் லேப்டாப்களையும் சார்ஜ் செய்ய முடியும். பிரத்யேக கார்பன் ஃபைபர் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கிறது.

ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் பவர் பேங்க் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

realme,30 watts,dart charge,power bank,indian market ,ரியல்மி,30 வாட்,டார்ட் சார்ஜ்,பவர் பேங்க்,இந்திய சந்தை

ரியல்மி 30 வாட் டார்ட் சார்ஜ் 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் சிறப்பம்சங்கள்:
- 10000 எம்ஏஹெச் லித்தியம் பாலிமல் பேட்டரி
- டூயல் அவுட்புட் யுஎஸ்பி டைப் ஏ மற்றும் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் இன்புட் யுஎஸ்பி டைப் சி
- 30 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ சிங்கிள் போர்ட் அவுட்புட்
- 25 வாட் யுஎஸ்பி டைப் சி / டைப் ஏ டூயல் போர்ட் அவுட்புட்
- 15 அடுக்கு பாதுகாப்பு
- லோ பவர் மோட்
- எடை: 230 கிராம்
- 30 வாட் சார்ஜர் மூலம் பவர் பேங்க் 1.9 மணி நேரங்களில் சார்ஜ் செய்திட முடியும்

Tags :
|