Advertisement

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Wed, 30 Sept 2020 6:12:33 PM

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம்!

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து உள்ளது. இதே நாளில் ரியல்மி ஸ்மார்ட் டிவி SLED அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

இதுமட்டுமின்றி ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ப்ரோ னை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த மாடலில் சன் கிஸ்டு லெதர் பினிஷ் கொண்டிருக்கும். இத்துடன் பல்வேறு இதர சாதனங்களும் அக்டோபர் 7 நிகழ்வில் அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு உள்ளது.

ரியல்மி 7ஐ சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|