Advertisement

ரியல்மியின் புதிய நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

By: Monisha Tue, 22 Sept 2020 5:19:11 PM

ரியல்மியின் புதிய நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ, 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் லென்ஸ், 2 எம்பி ரெட்ரோ லென்ஸ், 8 எம்பி செல்ஃபி கேமரா வங்கப்பட்டு உள்ளது.

ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குளோரி சில்வர் மற்றும் விக்ட்ரி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

realme company,narzo 20a,smartphone,processor,ram ,ரியல்மி நிறுவனம்,நார்சோ 20ஏ,ஸ்மார்ட்போன்,பிராசஸர்,ரேம்

ரியல்மி நார்சோ 20ஏ சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 ஜிபியு
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ், EIS
- 2 எம்பி B&W சென்சார்
- 2 எம்பி ரெட்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

Tags :