Advertisement

புதிய இயர்பட்ஸ் உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி ரியல்மி விண்ணப்பம்!

By: Monisha Sat, 29 Aug 2020 6:17:24 PM

புதிய இயர்பட்ஸ் உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி ரியல்மி விண்ணப்பம்!

ரியல்மி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சந்தையில் பட்ஸ் ஏர் மாடலுடன் கடந்த ஆண்டு களமிறங்கியது. ரூ. 3999 விலையில் ரியல்மி தனது வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ரியல்மி புதிய இயர்பட்ஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய இயர்பட்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் ப்ரோ எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

realme company,wireless,earbuds,patent,air pro ,ரியல்மி நிறுவனம்,வயர்லெஸ்,இயர்பட்ஸ்,காப்புரிமை,ஏர் ப்ரோ

புதிய இயர்பட்ஸ் உருவாக்குவதற்கான காப்புரிமை கோரி ரியல்மி சீனாவில் விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது. காப்புரிமையில் புதிய இயர்பட்ஸ் பெயர், அம்சங்கள் பற்றி எந்த தகவல்களும் இடம்பெறவில்லை. எனினும், இது ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்று இயர்டிப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பிரீமியம் மாடல் என்ற வகையில் புதிய இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால், இந்த இயர்பட்சில் பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|