Advertisement

ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி!

By: Monisha Tue, 11 Aug 2020 7:00:32 PM

ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு வந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி!

ரியல்மி பிராண்டின் புதிய 32 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. முன்னதாக இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி போன்ற ஆன்லைன் வலைதளங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் முதற்கட்டமாக இந்தியா முழுக்க சுமார் 1250 விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விற்பனை மையங்கள் ரியல்மி பிராண்டை நாடு முழுக்க பிரபலப்படுத்தும் நோக்கில் துவங்கபட்டு இருப்பதாக தெரிகிறது.

offline,sales,realmy brand,smart tv,android tv ,ஆஃப்லைன்,விற்பனை,ரியல்மி பிராண்டு,ஸ்மார்ட் டிவி,ஆண்ட்ராய்டு டிவி

ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் மற்றும் 4 ஸ்பீக்கர் சிஸ்டம், ஹெச்டிஆர் 10 மற்றும் டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கின்றன. இந்திய சந்தையில் ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் டிசிஎல், வு மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக அமைகின்றன.

ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மாடல் விலை ரூ. 12999 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 21999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, ஆன்லைன் தளங்களிலேயே விற்பனையாகி வந்தன.

Tags :
|