Advertisement

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகிறது ரியல்மி பட்ஸ் கியூ!

By: Monisha Sat, 30 May 2020 6:03:02 PM

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகிறது ரியல்மி பட்ஸ் கியூ!

ரியல்மி பிராண்டு தனது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலான ரியல்மி பட்ஸ் கியூவினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவலின் படி, ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும். இதன் விலை ரூ. 2 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. சீன சந்தையில் ரியல்மி பட்ஸ் கியூ விலை இந்திய மதிப்பில் ரூ. 1580 என நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி பட்ஸ் கியூ இயர்பட்ஸ் அதிக மென்மையாகவும், பயனரின் உள்ளங்கை மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையிலும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.

realmy brand,true wireless earbuds,realmy buds q,sensor,three colors ,ரியல்மி பிராண்டு,ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்,ரியல்மி பட்ஸ் கியூ,சென்சார்,மூன்று நிறங்கள்

இதில் உள்ள சென்சார் காதுகளில் இருந்து இயர்பட் எடுக்கப்பட்டதும் ஆடியோவை நிறுத்தி விடுவதோடு, கேசில் இருந்து எடுக்கப்பட்டதும் போனுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

இயர்பட்ஸ் கேசுடன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். பட்ஸ் கியூ மாடலின் இயர்பட்ஸ் 4.5 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. புதிய ரியல்மி பட்ஸ் கியூ பிளாக், வைட் மற்றும் எல்லோ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|