Advertisement

இந்திய சந்தையில் ரெட்மி 9 விரைவில் வருகிறது!

By: Monisha Thu, 20 Aug 2020 5:44:26 PM

இந்திய சந்தையில் ரெட்மி 9 விரைவில் வருகிறது!

சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை ரெட்மி 9 பிரைம் எனும் பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் எஃப்ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி80 பிராசஸர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசர் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக ரெட்மி 9சி மற்றும் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்களை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்தியாவில் ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 9 என்ற பெயரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

xiaomi,redmi 9,indian market,smartphone,international market ,சியோமி,ரெட்மி 9,இந்திய சந்தை,ஸ்மார்ட்போன்,சர்வதேச சந்தை

ரெட்மி 9சி ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எல்சிடி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

Tags :
|