Advertisement

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

By: Nagaraj Sun, 30 Aug 2020 08:58:07 AM

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

மொபைல் போன் நிறுவனமான சியோமி நிறுவனமானது இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் செல்போன் ரசிகர்களுக்கு மிகவும் விரும்பத்தக்க வகையில் உள்ளது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

india,introduction,redmi 9 smartphone,orange,sky blue ,இந்தியா, அறிமுகம், ரெட்மி 9 ஸ்மார்ட்போன், ஆரஞ்சு, ஸ்கை புளூ

மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ,ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஸ்பார்டி ஆரஞ்சு, ஸ்கை புளூ மற்றும் கார்பன் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது.

Tags :
|
|