Advertisement

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல்ஸ் முறையில் விற்பனை!

By: Monisha Sat, 05 Sept 2020 12:54:54 PM

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல்ஸ் முறையில் விற்பனை!

சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமானது முதல் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல்ஸ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அறிவிப்பை தொடர்ந்து ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் எந்நேரமும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுமட்டுமின்றி விரைவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

xiaomi,redmi note 9 pro max,smartphone,flash sales ,சியோமி,ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்,ஸ்மார்ட்போன்,ஃபிளாஷ் சேல்ஸ்

ஓபன் சேல் விற்பனையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 298 மற்றும் ரூ. 398 சலுகைகளை தேர்வு செய்யும் போது இருமடங்கு டேட்டா பெற முடியும். இத்துடன் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாதம் ரூ. 800 எனும் எளிய மாத தவணையில் கிடைக்கிறது.

Tags :
|