Advertisement

இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அறிமுகமாகியுள்ளது

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:21:01 AM

இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அறிமுகமாகியுள்ளது

சியோமி ஸ்மார்ட் பேண்ட்... சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் குறித்த விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ஆனது 1.08 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 128×220 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் மேலும் இது 2டி டெம்பர்டு கிளாஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ரெட்மி பேண்ட் ஆனது இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைன்டர் போன்ற வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பேண்ட் ஆனது நோட்டிபிகேஷன், செடன்ட்டரி ரிமைண்டர், டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் போன்ற ஆதரவுகளினைக் கொண்டுள்ளது.

india,redmi smart band,introduction,built-in charging ,இந்தியா, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட், அறிமுகம், பில்ட் இன் சார்ஜிங்

மேலும் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸடண்ட் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் 130 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் பிளாக், புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் டச் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் அதிகபட்சமாக 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டதாக உள்ளது. மேலும் இது பில்ட் இன் சார்ஜிங் போர்ட் வசதியினைக் கொண்டுள்ளது.

Tags :
|