Advertisement

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

By: Monisha Mon, 23 Nov 2020 07:55:11 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

petrol,diesel,crude oil,oil company ,பெட்ரோல்,டீசல்விலை,கச்சா எண்ணெய்,எண்ணெய் நிறுவனம்

சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 84.53 ரூபாய் எனவும் , டீசல் ஒரு லிட்டர் 76.55 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 6 காசு அதிகரித்து லிட்டர் 84.59 ரூபாய்க்கும், டீசல் 17 காசுகள் அதிகரித்து 76.72 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Tags :
|
|