Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • ரூ. 20 லட்சம் கோடி திட்டம்... பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் ஐ.நா. பொருளாதார வல்லுநர்கள்

ரூ. 20 லட்சம் கோடி திட்டம்... பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் ஐ.நா. பொருளாதார வல்லுநர்கள்

By: Nagaraj Thu, 14 May 2020 7:46:18 PM

ரூ. 20 லட்சம் கோடி திட்டம்... பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் ஐ.நா. பொருளாதார வல்லுநர்கள்

பிரதமர் மோடியை பாராட்டும் பொருளாதார வல்லுநர்கள்... கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை புதுப்பிக்க வளரும் நாடுகள் தங்கள் ஜி.டி.பி.,யில் ஒரு சதவீதத்தை அளிக்கவே யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா ரூ.20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என ஐ.நா பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியுள்ளனர்.

பிரதமர் மோடி செவ்வாயன்று ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பை அறிவித்தார். இதன் மூலம் குறு,சிறு நிறுவனங்கள், வரி செலுத்துபவர்கள், விவசாயிகள், முறைசாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிதி சலுகைகள் கிடைக்கும். இந்த நிலையில் ஐ.நா.,வின் ஒரு துறையான உலக பொருளாதார கண்காணிப்பின் கிளை தலைவர் ஹமீத் ரஷீத்திடம் இந்திய அரசு அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு தொகுப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

pm modi,praise,un,economics,experts ,பிரதமர் மோடி, பாராட்டு, ஐ.நா, பொருளாதாரம், வல்லுநர்கள்

அப்போது பேசிய அவர், இது மிகவும் வரவேற்கத்தக்க வளர்ச்சி. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமான ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு என்பது வளரும் நாடுகளில் இதுவரை மிகப்பெரியது. ஏனெனில் பெரும்பாலான வளரும் நாடுகள் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையிலான ஊக்குவிப்பு தொகுப்புகளையே உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் ஊக்குவிப்பு தொகுப்புகள் மிகப் பெரியவை.

இப்பெரிய திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு உள்நாட்டு நிதிச் சந்தையும், பெரிய திறனும் இந்தியாவுக்கு உள்ளது. இதன் தாக்கம் திட்ட வடிவமைப்பைப் பொறுத்தே அமையும் என்றார்.ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அதிகாரி ஜூலியன் ஸ்லாட்மேன் அளித்த பேட்டியில், இந்தியாவின் பொருளாதார தொகுப்பின் அளவு சிறப்பானது.

இந்த திட்டம் சந்தைகளுக்கு உறுதியளிப்பதற்கும் உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதற்கும் உதவும். ஆனால் அதே நேரத்தில் மக்கள் செலவழிக்க முடியாத நிலையில், பொருளாதார வளர்ச்சி திடீரென்று மாயமாக மீண்டும் தோன்றும் என்று எதிர்பார்க்க முடியாது என்றவர், இந்தியாவின் வைரஸ் எண்ணிக்கை குறைவாக இருந்த போதே ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியதால் வைரஸ் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் பாராட்டினார்.

மேலும், இந்தியாவில் முதலில் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும், இதனால் மக்கள் வெளியே சென்று மீண்டும் செலவிட முடியும் என்றார்.

Tags :
|
|