Advertisement

நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு விற்பனை

By: Nagaraj Wed, 08 Mar 2023 10:04:09 AM

நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் ரூ.1.10 கோடிக்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல்லில் பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்திற்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 4,700 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

auction,cotton,crore,name stone, ,ஏலம், கோடி, நாமக்கல், பருத்தி

இந்த பருத்தி மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 369 முதல் ரூ.8 ஆயிரத்து 162 வரையிலும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 49 முதல் ரூ.8 ஆயிரத்து 399 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 19 முதல் ரூ.8 ஆயிரத்து 569 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 100 வரையிலும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.

Tags :
|
|