Advertisement

இணையத்தில் லீக் ஆன சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

By: Karunakaran Thu, 12 Nov 2020 1:20:10 PM

இணையத்தில் லீக் ஆன சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

பல கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை கேலக்ஸி ஏ12, ஏ22, ஏ32, ஏ42, ஏ52, ஏ62, ஏ72, ஏ82 மற்றும் ஏ92 போன்ற பெயர்களில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டன. இவற்றில் கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

அந்த வரிசையில் தற்போது, கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் SM-A526B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அட்ரினோ 619 ஜிபியு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

samsung,galaxy a series,5g smartphone,internet ,சாம்சங், கேலக்ஸி ஏ சீரிஸ், 5 ஜி ஸ்மார்ட்போன், இண்டர்நெட்

கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் பிராசஸர், சியோமி எம்ஐ 10டி லைட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. கீக்பென்ச் முடிவுகளை பொருத்தவரை கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சிங்கிள் கோரில் 298 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1001 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது.

இதற்கு முன் வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ52 மாடலில் குவாட் கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. தற்போதைய தகவல்களின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் லென்ஸ் வழங்கப்படவுள்ளது. பிரைமரி சென்சார் தவிர மற்ற லென்ஸ் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Tags :