Advertisement

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாக்கம்

By: Karunakaran Fri, 04 Dec 2020 3:07:40 PM

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாக்கம்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விவரங்ள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும்.

இது ஜனவரி 14 ஆம் தேதி மற்ற இரு கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்21 சீரிசில் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடல் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் SM-G991U எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

samsung,galaxy s21 smartphone,snapdragon,888 processor ,சாம்சங், கேலக்ஸி எஸ் 21 ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன், 888 செயலி

இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதே ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் லஹியானா எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆக இருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகமான ஸ்னாப்டிராகன் 865 பிராசஸரின் மேம்பட்ட சிப்செட் ஆகும்.

Tags :