Advertisement

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Fri, 17 July 2020 5:57:25 PM

பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. புதிய கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, 720x1520 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் கிரே மற்றும் லைட் புளூ என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் சிறப்பம்சங்கள்
- 6.2 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் பிஎல்எஸ் டிஎஃப்டி எல்சிடி இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22
- 650MHz IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஒன் யுஐ கோர் 1.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி

Tags :