Advertisement

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு

By: Karunakaran Wed, 23 Dec 2020 12:07:28 PM

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாதனங்களை ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக அறிவிப்பு

The First Look 2021 எனும் தலைப்பில் சாம்சங் நிறுவனம் ஜனவரி 6 ஆம் தேதி நிகழ்வு ஒன்றை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்நிகழ்வில் புதிய டிவி மற்றும் இதர டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

இந்த நிகழ்வில் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என சாம்சங் அறிவித்து உள்ளது. டீசர் படத்தில் மாணிட்டர்கள், தொலைகாட்சிகள் மற்றும் இதர டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

samsung,new devices,january,first look 2021 ,சாம்சங், புதிய சாதனங்கள், ஜனவரி, முதல் பார்வை 2021

இதற்கு முன்னதாக இந்த ஆண்டு சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சாம்சங் நிறுவனம் QLED 8K டிவி, புதிய 88 மற்றும் 150 இன்ச் மைக்ரோ எல்இடி மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு சாம்சங் புதிய QLED 8K டிவி, தி செரிப் QLED டிவி மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் புதிய குவாண்டம் மினி LED டிவிக்களை 55, 65, 76 மற்றும் 85 இன்ச் அளவுகளில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதுதவிர டேப்லெட்கள், லேப்டாப் மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.


Tags :