Advertisement

சாம்சங் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 செல்போன்

By: Nagaraj Thu, 03 Sept 2020 10:14:25 AM

சாம்சங் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 செல்போன்

சாம்சங் அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஆன்லைன் வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் உட்புறத்தில் 7.6 இன்ச் QXGA+ இன்பினிட்டி ஒ டைனமிக் AMOLED ஸ்கிரீன் கொண்டதாக உள்ளது.

மேலும் வெளிப்புறத்தில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 650 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

samsung,galaxy z,fold 2,introduction,charging ,சாம்சங், கேலக்ஸி இசட், ஃபோல்டு 2, அறிமுகம், சார்ஜிங்

மெமரி அளவினைப் பொறுத்தவரை 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி / 512 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டதாகவும், மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.5 கொண்டுள்ளது. மேலும் கேமராவினைப் பொறுத்தவரை12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 10 எம்பி கவர் மற்றும் 10 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/NSA, சப்6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 25 வாட் வையர்டு மற்றும் 11 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Tags :
|